சமஷ்டியாட்சி யாப்பு அறிமுகப்படுத்தப்படும் வரை தேர்தலை பகிஷ்கரிப்போம்!
இன்று சங்கானையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வெகு விமரிசையாக தேர்தல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டார்கள்.
இவ்வேளையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஊடக பேச்சாளறர் க.சுகாஷ் கருத்து தெரிவிக்கையில் ,
இலங்கையில் தமிழர்களுக்காக ஒற்றையாட்சி யாப்பு நீக்கப்பட்டுச் சமஷ்டியாட்சி யாப்பு அறிமுகப்படுத்தப்படும் என்ற உத்தரவாதம் பிரதான வேட்பாளர்களால் வழங்கப்படும்வரை ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்போம் என தெட்ட தெளிவாக குறிபிட்டிருந்தார். சங்கானையில் பெருமளவு மக்கள் கருத்துகளை உள்வாங்கி ஏற்றுக்கொள்ளும் தன்மையை வெளிப்படுத்தினர்.
கருத்துகள் இல்லை