3 ஏக்கரில் கோழிப் பண்ணை அனுமதி கோரல்!
மருதங்கேணியில் 3 ஏக்கரில் கோழிப் பண்ணை..மேலாக சூரிய மின்கலம் அனுமதி கேட்கிறது சன்பவர் தனியார் நிறுவனம்.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதே செயலகத்திற்கு உற்பட்ட சுமார் மூன்று ஏக்கர் காணியில் கோழிப்பண்ணை அமைத்து அதற்கு மேலாக சூரிய மின்கலம் பொருத்துவதற்கான அனுமதியை தனியார் நிறுவனம் ஒன்று மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவிடம் அனுமதி தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளது.
புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்திக் கலந்துரையாடலின் போதே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
குறித்த கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மருதங்கேணிப் பிரதேச செயலாளரை தெளிவு படுத்துமாறு கோரிக்கை முன்வைத்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மருதங்கேணி ஜே 432 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் மூன்று ஏக்கர் காணியை சன்பவர் தனியார் நிறுவனம் கீழே கோழிப் பண்ணை அமைத்து மேலாக சூரிய மின்கலம் பொருத்துவதற்காக கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை