என் அப்பா எப்ப வருவார்??
என் காணாமல்போன பிள்ளை எங்கே? எங்கே? என்று கேட்டுக்கேட்டே. எம்மில் பலர் இவ் உலகை விட்டே காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள் .
கையிலே கொடுத்து விட்டு பதினைந்து வருடமாக கலங்கிய விழிகளும் உடைந்துபோன இதயத்துடன் இன்னும் உயிரோடு பிள்ளைகளுக்காய் கணவனுக்காய் அப்பாவிற்காய். என்று அலைந்து கொண்டிருக்கும் எங்களுடையவர்களுக்கு என்ன நீதியைத்தந்து விட்டிருக்கிறதுஉலகம் . உடைந்துபோய் மனம் முழுக்க ரணமாக
மாற்றமுடியா அழுகையோடும் ஏக்கத்தோடும் அலைந்து கொண்டிருக்கும் எங்கள் குலப்பெண்களுக்கு என்ன விடை கிடைக்கும்? அவள் ஈரவிழிகள் காய்ந்துவிட? நெஞ்சு வெடித்து அழுவது மட்டுமே அவரகளிடம் உள்ள ஆற்றுப்படுத்தல் . எத்தனை நாளைக்கென்று அவர்கள் இப்படியே புலம்பிப் புலம்பித்திரிவது. எங்கிருக்கிறானோ பிள்ளை எப்படி வரப்போகிறாரோ மனுசன் ? என்னை வந்து பாப்பாரோ அப்பா என்றும் குழந்தை மனதாய் குமுறிக்றொண்டிருக்கும் உறவுகளின் வலிகளும் வேதனைக
ளும் தீராதா ?தீராதா?
கருத்துகள் இல்லை