தேர்தல் விஞ்ஞாபனம் மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கி வைப்பு!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கு முன்னர் தேர்தல் மேடைகளில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ள விடயங்களை தெரிவித்திருந்தாலும், இங்கு குறிப்பிடப்பட்ட விடயங்கள் உண்மையாக யதார்த்தமாக பொதுமக்களின் நலன்புரி விடயங்களுக்காக இந்த நாட்டின் நன்மைக்காக அவற்றை செயல்படுத்துவோம். மக்கள் மயப்படுத்தப்பட்ட நாட்டை வளப்படுத்தும் முற்போக்கான வேலைத் திட்டங்களாக இது அமைந்து காணப்படுகிறது. காலக்கேடு சகிதம் இந்த மண்ணின் நிதர்சனமாக அவற்றை செயல்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தமதும் ஐக்கிய மக்கள் சக்தியினதும் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்காக தலதா மாளிகைக்குச் சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்தோடு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வழங்கி ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.
கருத்துகள் இல்லை