ஹிருணிகா சஜித் பிரேமதாசவுடன் பயணித்துவருகிறார்.!
ஹருணிகா ரணிலுடன் செல்லமாட்டார்...நம்பிக்கை வெளியிட்ட உமா.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பக்கமே நிக்கிறார் ரணில் பக்கம் செல்பவர்களுக்கு வாய்ப்புக்கள் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி வட மாகாண பிரதம அமைப்பாளர் உமாச்சந்திரப் பிரகாஷ் தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் ஹிருணிகா ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக பேசப்படுகிறதே என எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஹிருணிகா ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுடன் பயணித்துவருகிறார்.
அவர் துணிச்சல் மிக்க பெண் நானும் பல்வேறு போராட்டங்களில் அவருடன் இணைந்து பயணித்த இருக்கிறேன் எமது போராட்ட வழக்குகள் நீதிமன்றில் நிலுவையுள் உள்ளது.
ஆகவே ஹிருணிகா ரணில் பக்கம் செல்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ள நிலையில் தொடர்ந்தும் ஜனாதிபதி வேட்பாளரான் சஜித் பிரேமதாசவுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார் என அவர் மேலும் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை