R.T.O. ஆபீஸில் ஏன் 8 போடுகிறோம் தெரியுமா ?
நாம் அனைவருமே ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்கு உரிய பயிற்சி மேற்கொள்வோம்.
ஆனால், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று அங்கு எட்டு போட்டு காண்பிக்க வேண்டும் என்று நிலை வரும்போது மனதுக்குள் ஒரு பயம் வரும்.
சிறு வயதிலிருந்தே சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற பலருக்கும் ஆசை இருக்கும். அதுபோல, பெரியவனானதும் பைக், கார் போன்ற வாகனங்கள் சொந்தமாக வாங்கி ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால், நாம் பொதுவெளியில் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால், அதற்கு கட்டாயம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அப்படி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஏன் 8 போட வேண்டும் என்று சொல்கிறார்கள் தெரியுமா என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கணிதத்தில் எத்தனையோ எண்கள் இருக்கின்றன. இருந்தாலும் லைசென்ஸ் வாங்கும்போது எதற்காக 8 போடச் சொல்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் மனதில் இருக்கும்.
அதிலும் சிலர் குறுக்கு வழியில் சென்று 8 போடாமல் எப்படியாவது ஓட்டுனர் உரிமம் வாங்கி விட வேண்டும் என்று முயற்சி செய்வார்கள் ஆனால், 8 போட்டுக் காட்டுவது நமக்குத்தான் நல்லது.
8ஐ தவிர, 1லிருந்து 9 வரை இருக்கும் அனைத்து எண்களுக்குமே ஒரு ஆரம்பமும் ஒரு முடிவும் கட்டாயம் இருக்கும். அதாவது, உதாரணமாக, 7 என்ற எண்ணை எடுத்து கொள்வோம்.
அது மேலிருந்து தொடங்கி கீழே முடிந்து விடுகிறது. இதுபோலதான் மற்ற எண்களும் இருக்கின்றன.
ஆனால், 8 அப்படிக் கிடையாது. 8 ஆரம்பம் தெரிந்தாலும் அதற்கு முடிவு என்பதே கிடையாது.
8 என்ற எண் மட்டும் இடைவிடாது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒரு எண் வடிவம் ஆகும்.
ஓட்டுநர் உரிமம் பெறும்போது 8 வடிவத்தில் இருக்கும் இடத்தில் வாகனத்தை ஒட்டி காட்ட வேண்டும் என்று சொல்வார்கள்.
அப்படி நாம் 8 என்ற வடிவத்தில் வண்டி ஓட்டிக் காட்டும்போது கால்களை தரையில் வைக்காமல் வண்டியை இயக்க வேண்டும்.
அதுபோல, 8 என்ற வடிவத்தில் வாகனத்தை ஓட்டிக் காட்டும்போது வலப்பக்கம் திரும்புவது, இடப்பக்கம் திரும்புவது மற்றும் குறுக்கே திரும்புவது அதேபோல அகலமான வளைவுகளில் யூ-டர்ன் செய்து கடப்பது போன்ற செயல்கள், 8 என்ற வடிவத்தில் வண்டியை ஓட்டிக் காட்டும்போது சவாலானதாக இருக்கும்.
அதுபோல, வாகனத்தில் செல்லும்போது சாலைகளில் பல இடங்களில் வளைவுகள் இருக்கும்.
அதை நாம் பாதுகாப்பாகவும், தைரியத்துடனும் கடந்து செல்ல வேண்டும். அப்படி நாம் சாலைகளில் இருக்கும் எட்டு போன்ற வளைவுகளை கடந்து செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ஓட்டுநர் உரிமம் பெறும்போது 8 போடச் சொல்கிறார்கள்.
இப்படி 8 வடிவத்தில் இருக்கும் சவால்களை கடந்து, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது.
அதுபோல, ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனங்களை ஓட்டுவது மிகவும் நல்லது.
8 போடச் சொல்வது நாம் வாகனத்தை விபத்துக்கள் இல்லாமல் சாலையில் இயக்குவதற்காகத்தான் என்பதை உணர்ந்து முறைப்படி 8 போட்டு ஓட்டுநர் உரிமம் பெறுவோம்.
கருத்துகள் இல்லை