மனைவியை மீட்டுத்தாருங்கள் -குடும்பஸ்தர் ஒருவர் போராட்டம்!
மனைவியை மீட்டுத்தாருங்கள் - மரத்தில் ஏறி குடும்பஸ்தர் ஒருவர் போராட்டம்!
- தனது மனைவியை மீட்டுத்தருமாறு கோரி குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக மரத்தில் ஏறி போராட்டம் நடத்தியமையால் பரபரப்பு ஏற்பட்டது!
குறித்த சம்பவம் இன்று (03:09:2024) காலை இடம்பெற்றது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது!
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை (வயது 30) ஒருவர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரத்தில் ஏறி கீழே இறங்கமால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றுள்ளதாகவும் அவரை சேர்த்து வைக்குமாறே இவ்வாறு மரத்தில் ஏறி போராடியுள்ளார்.
நீண்ட நேரமாக மரத்தில் இருந்து இறங்காமல் இருந்தமையால் குறித்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்ப்பட்டது. பின்னர் பொலிசார் மற்றும் ஏனைய தரப்பினரின் வேண்டுகோளிற்கிணங்க அவர் மரத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.
கருத்துகள் இல்லை