செ.கஜேந்திரனை அரசியலில் இருந்து அகற்ற விக்கினேஸ்வரனுக்கு என்ன தகுதி இருக்கு?
இருவரும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்.
ஒருவர் கஜேந்திரன். இன்னொருவர் விக்கினேஸ்வரன்
பதவியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி. எங்கு போராட்டம் நடந்தாலும் அங்கு கஜேந்திரனை காணலாம்.
கஜேந்திரன் சாதாரண மோட்டார் சயிக்கிளில்கூட பயணிப்பார். போராட்ட களத்தில் வெறும் மண் தரையில்கூட படுத்திருப்பார்.
கஜேந்திரன் அரசு பதவியில் இருந்து பென்சன் எடுத்துவிட்டு அரசியலுக்கு வரவில்லை. படிக்கிற காலத்தில் இருந்து போராட்டங்களில் பங்கெடுத்து வருகிறார்.
கஜேந்திரனின் அரசியல் நிலைப்பாட்டில் தவறு கண்டால் தாராளமாக விமர்சிக்கலாம்.
அதைவிடுத்து அவரை அரசியலில் இருந்து அகற்ற விக்கினேஸ்வரனுக்கு என்ன தகுதி இருக்கு?
ஒருவரை அரசியலில் இருந்து அகற்றும் உரிமையும் தகுதியும் மக்களுக்கு மட்டுமே உண்டு. அதை விக்கினேஸ்வரன் உணர்ந்து கொள்வது நல்லது. என தோழர் பாலன் தனது முகநூலில் பதிவிட்டமை குறிப்பிட்டத்தக்கது.
கருத்துகள் இல்லை