இந்தியாவின் தங்கப் பதக்கம் உறுதியானது.2:2


45வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளானது ஹங்கேரியின் புடாபெஸ்டில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் பங்கேற்க இந்தியாவின் சார்பில் எப்போதும் இல்லாத வகையில்,


குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, விதித் குஜ்ராத்தி முதலிய டாப் கிளாஸ் வீரர்கள் அடங்கிய ஆண்கள் அணியும்,


ஹரிகா துரோணவல்லி, வைஷாலி ரமேஷ்பாபு, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் மற்றும் அபிஜித் குண்டே அடங்கிய ஸ்டிராங்கான பெண்கள் அணியும்

பயணப்பட்டது. 


இதுவரை இந்தியா செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் வெண்கலப்பதக்கம் மட்டுமே வென்றிருக்கும் நிலையில், இந்தமுறை இந்த பவர்ஃபுல் டீம் ஆனது நிச்சயம் தங்கத்தை நாட்டிற்கு எடுத்துவரும் என்ற நம்பிக்கையுடன் இந்தியா காத்திருந்தது.


இந்நிலையில் ஞாயிற்று கிழமையான இன்று ஓபன் பிரிவில் இந்திய ஆண்கள் அணி செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது.


ஆண்கள் அணி தங்கம் வென்ற சிறிதுநேரத்தில் இந்திய பெண்கள் அணியும் தங்கம் வென்று, தங்களுடைய முதல் செஸ் ஒலிம்பியாட் தங்கத்தை பதிவுசெய்து சாதனை படைத்தது.


2024 செஸ் ஒலிம்பியாட்டில் ஓபன் பிரிவில், ஹரிகா துரோணவல்லி, வைஷாலி ரமேஷ்பாபு, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் மற்றும் அபிஜித் குண்டே அடங்கிய ஸ்டிராங்கான பெண்கள் அணி பங்கேற்றது.


முதல் வெற்றியை பொறுத்தவரையில் ஹரிகா துரோணவல்லி குணாய் மம்மட்சாதாவுக்கு எதிராக பலகையை வென்று முத்திரை பதித்தார். உடன் திவ்யா தேஷ்முக் கோவர் பெய்துல்லயேவாவை வீழ்த்தினார். வைஷாலி வலுவான எதிரணியை சந்தித்தாலும், கானிம் பாலாஜெயேவாவை எதிர்த்து வந்திகா அகர்வால் பெற்ற அசத்தலான வெற்றி இந்தியாவை 19 புள்ளிகளுடன் வலுவான நிலையில் முடிக்க உதவியது


இந்திய மகளிர் அணி இறுதிச் சுற்றில் அஜர்பைஜானுக்கு எதிராக 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றாலும், அவர்களுடன் இணைந்து கஜகஸ்தானும் புள்ளிகளில் சம நிலையில் இருந்ததால், இந்தியாவின் தங்கத்திற்காக வாய்ப்பு அமெரிக்கா மற்றும் கஜகஸ்தான் போட்டியை பொறுத்தே இருந்தது.


ஆனால் அமெரிக்காவுக்கு எதிராக கஜகஸ்தான் அணி 2-2 என சமன்செய்த பிறகு, புள்ளிகள் அடிப்படையில் இந்தியாவின் தங்கப் பதக்கம் உறுதியானது..!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.