24 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் பெண் பிரதமர்!


🅰️ அநுரவுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து


🅰️ விரைவில் டில்லி செல்லும் சாத்தியம்


🅰️ டிசம்பரில் பொதுத்தேர்தல்


🅰️ மீண்டும் களமிறங்கும் ‘யானை’ 


இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று பதவிப்பிரமாணம் செய்த பின்னர், அமையவுள்ள உத்தேச இடைக்கால அரசாங்கத்தின் பிரதம அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்படவுள்ளார்.


தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பதவி விலகவுள்ளார் எனவும், அதன் பின்னர் தற்போதைய அமைச்சரவை கலைந்துவிடும் எனவும் தெரியவருகின்றது. 


பொதுத்தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் அமையும்வரை செயற்படும் இடைக்கால அரசில், 4 பேர்கொண்ட உறுப்பினர்கள் 15 அமைச்சுகளை பகிர்ந்துகொள்ளவுள்ளனர் என அறியமுடிகின்றது. 


இலங்கை அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் இரு பெண்கள் மாத்திரமே பிரதமர் பதவியை வகித்துள்ளனர்.


1960 ஜுலை 21 ஆம் திகதி முதல் 1965 மார்ச் 25 ஆம் திகதிவரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமர் பதவியை வகித்துள்ளார். உலகில் முதல் பெண் பிரதமர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது. பிறகு 1970 முதல் 77 வரையும் அவர் பிரதமராக பதவி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.