வடக்கு மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகன் நியமனம்!📸

 


வடக்கு மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் இன்று ( 25) சனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளமை சிறப்பானதாகும். 


முன்னாள் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சியில் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக இருந்த போது வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பல ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். 

இந்த வகையில் வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு மீள்குடியேற்றம் பற்றி நன்கு தெரிந்த ஒருவர் தற்போது ஆளுநராக தெரிவு செய்யப்பட்டமை வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றத்தில் நல்ல சமிக்ஞை வெளிபட்டுள்ளது. அத்துடன் அவர் தெல்லிப்பழை மண்ணின் மைந்தரும் ஆவர்.


இனி வரும் நாட்களில் புதிய சனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களுடன் இணைந்து இந்த மீள்குடியேற்ற பிரச்சினையை தெரிவித்து வலிகாமம் வடக்கில் மீதி காணிகளை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பு செய்ய நடவடிக்கை எடுப்பார் என்பது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது..... பார்க்கலாம் அடுத்த கட்ட நகர்வுகளை...





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.