யாழ்ப்பாண மாவட்டத்திற்கான மாதிரி வாக்குச் சீட்டு!
2
024 பாராளுமன்ற தேர்தலிற்கான யாழ்ப்பாண மாவட்டத்திற்கான மாதிரி வாக்குச் சீட்டே இது.
இதில் 23 கட்சிகள் மற்றும் 21 சுயேட்சைக் குழுக்களின் பெயர்களும், அவற்றின் மாதிரி சின்னங்களும் காணப்படுவதுடன் இவற்றின் கீழே 9 இலக்கங்கள் காணப்படுகின்றன.
இதில் தாங்கள் விரும்பும் கட்சி அல்லது சுயேற்சைக்குழுவிற்கு எதிரே உள்ள கூட்டிற்குள் முதலில் ஒரு புள்ளடியினை இடுவதுடன் கீழே காணப்படும் இலக்கங்களில் ஆகக்கூடியது மூன்று வேட்பாளர்களின் இலக்கங்களின் மீது புள்ளடிகளை இடுவதன் மூலம் தங்களின் வாக்கினை அளிக்கலாம்.
எனக்கு என்னமோ செல்லுபடி அற்ற வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக வரும் போல இருக்கிறது, 44 பெயர்கள் வாசிக்க வேண்டும் அதன் பின்னர் அதில் ஒன்றுக்கு புள்ளடி இட வேண்டும், பின்னர் கீழே காணப்படும் 9 இலக்கங்களில் ஒன்றில் மட்டும் அல்லது இரண்டில் மட்டும் அல்லது மூன்று இலக்கங்களில் புள்ளடி இட வேண்டும். படித்தவர்களுக்கே கஷ்டம் என்றால் மற்றவர்களின் நிலை?
கருத்துகள் இல்லை