தேசியத்தில் தங்கம் வென்றார் ஜெயக்காந்தன் பிரியங்கா!


2024ம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வின் ஓர் அங்கமான டேக்வாண்டோ" Taekwondo

 போட்டியானது கடந்த 28,29,30 ம் திகதிகளில் இரத்தினபுரியில் நடைபெற்றிருந்தது


இப் போட்டி நிகழ்வில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் கலந்து கொண்ட மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் உயர்தர தேசிய பாடசாலை மாணவி ஜெக்காந்தன் பிரியங்கா தங்கப்பதக்கத்தை தனதாக்கி சம்பியன் ஆனார்.


சிறு பராயம் முதலே விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு செயற்ப்பட்ட இவர் பெற்றோரின் அற்பணிப்பு பயிற்றுவிப்பாளர்களின் கடின உழைப்பின் மூலமும் தனது தொடர் பயிற்சியின் மூலமும் இவ் மகத்தான வெற்றியை பெற்று பாடசாலைக்கும் கிழக்குமாகாணத்திற்கும் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்க்கும் பெருமையினை தேடிக்கொடுத்திருக்கிறார்.


இச் சாதனையை புரிந்த மாணவிக்கும் பயிற்றுவித்த SKO அமைப்பினருக்கும் வெற்றியில் பங்கெடுத்த அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம் 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.