தமிழ் மக்களின் உரிமைக்காக களத்திலும் விடியலிற்காகப் போராடும் தமிழ்த்தேச மக்கள் முன்னணி!


 ஈழத் தமிழ் மக்களின் உண்மையான விடியலிற்காகப் போராடும் 
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்க்கு உங்கள் வாக்கை வாக்களியுங்கள் தாயக உறவுகளே!

எங்கள் தமிழினத்திற்குத் தேவையானது வாக்கு அரசியல் அல்ல!
தேச விடுதலைக்கான இலட்சியப் பயணத்தில் தேர்தல்கள் மைல் கற்களேயன்றி இலக்குகள் அல்ல!

நாம் கொண்ட இலட்சியப் பாதைதான் எம்மை வழிநடத்துகிறது.
மக்களிற்காகவே அரசியல் இருக்க வேண்டும்!

அந்நிய சக்திகளிற்கு விலைபோன அரசியலிற்காக தாம் நினைத்தபடியெல்லாம் மக்களை மடைமாற்றித் திசை தொலைந்து இலக்கற்ற கொள்கை மறந்தவர்களாக மாற்றப்படும் சூழ்ச்சியாளர்களிடமோ சிங்கள வேட்பாளர்களிற்கோ தமிழர்
தாயகத்தில் எதிர்வரும் தேர்தலில் ஒற்றைத் தமிழனும் வாக்களிக்கக் கூடாது!
வரும் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய எழுச்சியோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டுகின்றேன்!

ஏன்? எதற்காக?

கேள்விகளைக் கேட்டு உண்மைகளை அறியுங்கள்!

தமிழ் மக்களின் உரிமைக்காக களத்திலும் பாராளுமன்றத்திலும் அனைத்துலக மட்டத்திலும் உண்மை வழுவாமல் கொள்கை மாறாமல் மாவீர தியாகங்களையும் தேசியத் தலைமையினதும் கனவுகளை உள்வாங்கி இன்றும் குரல் கொடுத்துப் போராடும் மக்களிற்கான உண்மைக்காக!

அது மட்டுமல்ல..இவர்கள் மற்றவர்களில் பலர் போல
அரசுகளின் கைக் கூலிகளாக இரண்டகர்களாக விலை போகவில்லை!
இவர்கள் சாராயக்கடை லைசன்ஸ் பெறவில்லை!

பெற்றோல் செட் லைசன்ஸ் பெறவில்லை!

வாகன அனுமதி பெறவில்லை!

அரசின் பங்காளிகள் ஆகவில்லை!

காவல்துறைப் பாதுகாப்பு( MSD) பெறவில்லை!

எந்த ஒரு நிகழ்விலும் கழுத்தில் மாலைகள் ஏந்தவில்லை!

தேர்தலில் சிங்கள சனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கவில்லை!

எந்த அந்நிய அரசினது திணிப்பு அரசியலைத் மக்களிடம் திணித்து விலைபோகவில்லை!

மாறாக …

என்றும் தமிழர் உரிமைகளிற்காகவும் சிங்கள, பெளத்த ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் அனைத்து வழிகளிலும் போராடுகின்றனர். குரல் கொடுக்கின்றனர்.

இனப்படுகொலைகளையும் மாவீரர்களின் தியாகங்களையும் மக்களிற்கு நிகழ்வுகளூடாக நினைவூட்டி வரலாற்றை அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் சொல்கின்றனர்! 

போராட வைக்கின்றனர்!

இப்பொழுது சொல்லுங்கள் இவர்களிற்கு வாக்களியுங்கள் என நான் சொல்வதில் தவறு உண்டா?

“கொள்கை வழி நிற்பவர்களான இவர்களிற்கு வாக்களியுங்கள்!” என்று நாம் கேட்பதில் என்ன தவறு?

அது இனமான உண்மைத் தமிழரது கடமை!

மக்களிற்கான கடமைகளை உண்மை நெறி நின்று நினைவூட்டுவது என் போன்ற மக்களிற்கான ஊடகத் தொண்டர்களின் கடமை!

(இப்படி எழுதுவதால் கட்சிக்காக குரல் கொடுக்கின்றேன் என சிலர் சொல்வார்கள்! நெஞ்சமெல்லாம் வஞ்சம் வைத்து வெஞ்சினப் பகையும் வளர்ப்பார்கள்! கவலையில்லை!)

என் இனத்திற்கு உண்மையாக நிற்பவர்களிற்கு உண்மையாகக் குரல்கொடுப்பது எம் மக்களிற்கான உண்மைக்கான குரல் கொடுப்பே!

“தாயக உறவுகளே!

உங்கள் மனசாட்சிக்கு உண்மையாக சிந்தித்து எங்கள் தமிழ் மக்களிற்கு உண்மையாகவுள்ள இவர்களிற்கு வாக்களியுங்கள்!” என உரிமையோடு உண்மையின் பக்கமான என் குரலாக உங்களிற்காக உங்களிடம் வேண்டுகின்றேன்!

ஈழத் தமிழரின் இறுதி இலக்கு எமக்கான இறைமையுள்ள தன்னாட்சி உரிமை கொண்ட தாயகமே!

தாயகத்தின் விடுதலை ஒன்றே எனது கொள்கை!


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.