இதுவும் கடந்து போகும்!!


என் மனநிலை மாறிவிட்டது

யாரும் வேண்டாம்

யாருக்காகவும் வேண்டாம்

ஒரு சொல்லும் வேண்டாம்

ஒரு ஆதரவும் வேண்டாம் 

ஒரு தொந்தரவும் வேண்டாம்

போதும் என்ற மனநிலை

மாற்றம் பெற்று விட்டது

பயணிக்கவும் வேற்று மனிதர்களை 

படிக்கவுமே மனது 

விரும்புகிறது 

காதலும் வேண்டாம் 

யாரிடமும் உயிர் மண்டியிடவும்

வேண்டாம் ஒரே ஒரு

தனிமை போதும்

இந்த வெறுமை போதும்

மனிதர்களின் உச்ச கட்ட 

பழிவாங்கும் கழிவறை 

போன்ற மனநிலையையும்

கண்டு சலித்துவிட்டேன்

அது என்னை துளியேனும் 

பாதிக்கவில்லை ஆனால் 

உங்களை உறுத்திக்கொண்டே 

இருக்கும் என்பது உறுதி 

ஆகவே ஏதும் வேண்டாம் 

என்னும் மாபெரும் இழைப்பாறுதலில் 

மனது நடைபயில்கிறது

உங்கள் இழப்புக்களும் 

உங்கள் விலகலும்

உங்கள் மனநிலையும்

எதும் என்னை செய்துவிடாது

நான் முற்றும் திறந்த் முற்போக்காளனாய்

விடைபெறுகிறேன்.


இதுவும் கடந்து போகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.