அவரக்காய் பொரியல் செய்வது எப்படி!!
தேவையான பொருட்கள்
▢1/2 கிலோ அவரைக்காய் ▢அரை ஸ்பூன் மஞ்சள் தூள் ▢3 சில்லு வர மிளகாய் ▢4 சில்லு தேங்காய் ▢4 ஸ்பூன் எண்ணெய் ▢1/2 ஸ்பூன் கடுகு ▢1/2 ஸ்பூன் சீரகம் ▢1/2 ஸ்பூன் ஸ்பூன் பருப்பு ▢1/2 ஸ்பூன் கடலைப்பருப்பு ▢1/4 ஸ்பூன் உப்பு ▢1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
▢ முதலில் அவரைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதேபோல் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
▢ பிறகு வர மிளகாயை இரண்டாக உடைத்து வைக்க வேண்டும்.பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். பிறகு கடாயில் எண்ணெய்சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம்சேர்த்து தாளிக்க வேண்டும்.
▢ பிறகு அரை ஸ்பூன் கடலைப்பருப்பு, அரை ஸ்பூன்உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பினன நான்கு வர மிளகாய்சேர்த்து வதக்க வேண்டும்.
▢ பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துவதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அவரைக்காயை சேர்த்து, அதனுடன் ஒருஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அரை ஸ்பூன் மஞ்சள்தூள்சேர்த்து நன்றாகக் கலந்து விடவேண்டும்.
▢ இதனுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துவிட்டு, தட்டு போட்டு மூடி, வேக வைக்க வேண்டும்..பின்னர் மூன்று சில்லு தேங்காயை காய் துருவலில்பொடியாக துருவிக்கொண்டு, வேக வைத்துள்ள அவரைக்காயின் மீதுள்ள தட்டை திறந்து, அதன் மீதுதேங்காய் துருவலை சேர்த்துக் கலந்து விட்டு, அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு இறக்கினால் போதும். சுவையான அவரைக்காய் பொரியல் தயாராகிவிடும்.
#tamilarul #tamilnews #tamilshorts #news #tamil #hinduplaceofworship #samiyel #திண்டுக்கல்சமையல்
கருத்துகள் இல்லை