வடக்கு கிழக்கு எங்கும் இராணுவ மூலம்1,000 விகாரைகள் அமைக்க N.N.Pஉத்தேசம்!
2008 ஆம் ஆண்டுக்கான இறுதி போர் (War Budget) வரவு செலவு திட்டம் தோல்வியடைந்து மஹிந்த ராஜபக்சே அரசாங்கம் கவிழும் அபாயம் நிலவிய போது மூன்றாம் வாசிப்பில் குறித்த வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற உதவி மஹிந்த ராஜபக்சேவை ஜேவிபி காப்பாற்றியிருந்தது
ஜேவிபி காப்பாற்றிய இந்த மஹிந்த ராஜபக்சே அரசாங்கம் தான் 2009 ஆம் ஆண்டு தமிழ் சமூகத்தை இன*படுகொ*லை செய்து தொல்லியல் திணைக்களம் ஊடக வடக்கில் 379 பௌத்த தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தியதாக அறிவித்தது
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 48 பௌத்த தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தியது
கிளிநொச்சியில் 16 இடங்களும் முல்லைத்தீவில் 175 இடங்களும் பௌத்த தொல்லியல் இடங்களாக அறிவித்தது
அதே நேரம் மன்னாரில் 60 பௌத்த தொல்லியல் தளங்கள் இருப்பதாக பதிவு செய்தது
வவுனியாவில் 80 இடங்களைக் கண்டறிந்ததாக பட்டியலிட்டு இருந்தது
இதில் 83 இடங்களை மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் தேசிய மரபுருமைகள் அமைச்சு வர்த்தமானி ஊடக பௌத்த தொல்லியல் இடங்களாக 2013 ஆம் ஆண்டு அறிவித்தது
இக்காலப்பகுதியில் மேற்படி ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக புலனாய்வாளர்களின் நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழ் சமூகம் திரண்டு போராடிய போதெல்லாம் தமிழ் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஜேவிபி எந்த தளத்திலும் ஒத்துழைக்கவில்லை
மாறாக ஜேவிபி மிக மோசமாக பல தளங்களில் இனவாதம் மற்றும் மதவாதம் பேசியது
இந்த ஜேவிபி 2015 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த திரு மைத்திரிபலா சிறிசேனா -ரணில் விக்ரமசிங்கே அரசாங்கத்தின் பங்காளிகளாகவும் இருந்தது
திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் அலரி மாளிகையில் ஜேவிபி க்கு தனி அலுவலகமே இருந்தது
தற்போது உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சராகவிருக்கும் திரு ஆனந்த விஜேபால அவர்களே குறித்த அலுவலகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டு இருந்தார்
அதே போல திரு அனுரா குமார திஸநாயக்க அவர்களும் ஆட்சியாளர்களின் உதவியுடன் தான் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டு இருந்தார்
அதாவது ஐக்கிய தேசிய கட்சி வடக்கு கிழக்கு எங்கும் 1,000 விகாரைகள் அமைக்க போவதாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்ட போது தமிழரசு கட்சி அமைதியாகவிருந்ததாக குற்றம் சாட்டும் ஜேவிபியும் அதே காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்ததை மறைகின்றது
குறிப்பாக வடக்கு ஆளுநராகவிருந்த ரெஜினோல்ட் குரே தலைமையில் தையிட்டியில் விகாரை (Vihara) க்கான அடிக்கல் நாட்டப்பட்ட போதும் கூட ஜேவிபி ஆட்சியாளர்களின் பங்காளிகளாக இருந்தது
இப்போது நிறைவேற்று அதிகாரம் ஜேவிபியிடம் இருக்கின்றது . பாராளுமன்றில் 2/3 பெருன்பான்மை ஜேவிபி க்கு இருக்கின்றது
இலங்கை தீவில் இனவாதம் மதவாதம் தோற்கடிக்கப்பட்டதாக ஜேவிபி சொல்லுகின்றது
ஆனால் தொல்லியல் தரவுகளின் கீழ் இலங்கை தீவில் தமிழர்களுக்கென்று எந்த நிலப்பரப்புகளும் கிடையாது என் இனவாதம் நிறுவ முயற்சிக்கும் எல்லாவல்ல மேதானந்த தேரரை தொல்லியல் திணைக்களத்தின் ஆலோசகராக செயற்பட அனுமதித்து இருக்கிறது
ஜேவிபியின் புத்தசாசன அமைச்சர் திரு ஹினிதும சுனில் செனவி ஊடக சட்டவிரோத குருந்தூர்மலை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி நாயக்க தேரரை சந்தித்து வடக்கின் புராதன பௌத்த தளங்களை (?) பாதுகாக்க விசேட திட்டங்கள்/ நடவடிக்கை எடுப்பதாக ஊக்குவிக்கின்றது
பொருளாதார நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் Appropriation bill 2025 யில் தொல்லியல் திணைக்களத்திற்கு ரூபா 2,520 மில்லியனை ஒதுக்கியிருக்கின்றது
தையிட்டியில் அப்பாவி மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளில் சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள பௌத்த கட்டுமானங்களை அகற்ற முடியாது என கதை சொல்லுகின்றது
ஊழல் ஒழிப்பு பற்றி பேசும் ஜேவிபி தனியார் காணிகளில் சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள பௌத்த கட்டுமானங்களுக்கு பௌத்த சாசன அமைச்சு நிதி விடுவித்தது என விசாரிக்க மறுக்கின்றது
இது போதாதென்று தங்கள் நிலங்களை கேட்கும் தமிழ் மக்களை இனவாதிகளாகவும் மதவாதிகளாகவும் சித்தரிக்கின்றது
சிங்கள பௌத்த அரசியலின் அடிப்படைக் கருத்தியலை கேள்விக்குட்படுத்த மறுக்கும் இலங்கை நீதிமன்றங்களிடம் தீர்வு கேட்குமாறு ஜேவிபி நாடகம் ஆடுகின்றது
கன்னியா வெந்நீர் ஊற்று ஆக்கிரமிப்புக்கெதிரான வழக்கு ,திருகோணமலை ஸ்ரீ மலை நீலியம்மன் கோவில் தீயிடபட்டு பப்பாத ராஜமஹா விகாரை கட்டப்பட்ட வழக்கு, நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தம்மாலங்காரகீர்த்தி தேரரின் இறுதிக் கிரியை தொடர்பான வழக்கு, குறுந்தூர் மலை வழக்கு உட்பட்ட வழக்குகளில் நடந்த அநியாயங்களை மறைத்து விட்டு நீதிமன்றம செல்லுமாறு எகத்தாளம் பேசுகின்றது
கருத்துகள் இல்லை