பிரதான வீதியில் மின் விளக்கு தொகுதிகள் திருத்தம்.!📸

அக்கரைப்பற்று பிரதான வீதியில் கடந்த சில காலமாக ஒளிராமல் செயலிழந்து காணப்பட்ட தெரு மின் விளக்கு தொகுதிகள் தற்போது துரிதமாக திருத்தம் செய்யப்பட்டு வருகின்றன.


அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இதன் பிரகாரம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை தொடக்கம் தைக்கா நகர் வரையான பிரதான வீதியில் மின்குமிழ்கள் புதிதாக பொருத்தப்படப்பட்டு, ஒளியூட்டப்பட்டுள்ளன.


இவ்வேலைத் திட்டத்தின் கீழ் கட்டம் கட்டமாக அனைத்துப் பகுதிகளிலும் தெரு விளக்கு தொகுதிகள் திருத்தியமைக்கப்படவுள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார்.


-அஸ்லம் எஸ்.மெளலானா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.