யாழ்ப்பாணம் திருச்சிக்கு இடையிலான விமான சேவை ஆரம்பம்!📸
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே 47 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நேரடி விமான சேவை தொடங்கியது. இண்டிகோ ஏர்லைன்ஸ் இந்த விமான சேவையை இயக்குகிறது.
திருச்சிராப்பள்ளியில் இருந்து பிற்பகல் 1:25 மணிக்கு புறப்படும் விமானம் பிற்பகல் 2:25 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும். அதேபோல், யாழ்ப்பாணத்திலிருந்து விமானம் பிற்பகல் 3:05 மணிக்கு புறப்பட்டு மாலை 4:05 மணிக்கு திருச்சிராப்பள்ளியை வந்தடையும்.
திருச்சிராப்பள்ளியிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான ஒருவழி டிக்கெட்டின் கட்டணம் 5,900 ரூபாய் முதல் 6,400 ரூபாய் வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை