மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு!
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றுள்ள அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும், நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
மரியாதை நிமித்தமாக, மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, அரசியல் மற்றும் சமூக நிலைவரங்கள் சார்ந்து பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை