100 கோடி கிளப்பில் இணைந்த டிராகன் !
பிப்ரவரி மாதம் வறட்சியான மாதம் என அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக வசூல் வேட்டை செய்ய முடியாமல் திணறியதும் அஜித் ரசிகர்கள் முட்டுக் கொடுத்து வந்தனர். ஆனால், அதன் பின்னர் 2 வாரங்கள் கழித்து வெளியான பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏஜிஎஸ் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான தளபதி விஜய்யின் கோட் திரைப்படம் 455 கோடி வசூல் ஈட்டியது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே பிரதீப் ரங்கநாதன் படம் அந்த நிறுவனத்துக்கு அடுத்த பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை