தொழிற்சந்தை நிகழ்வுக்கான முன்னாயத்த கலந்துரையாடல்!📸
மாவட்டச் செயலகத்தில் 08.03.2025 நடைபெறவுள்ள தொழிற்சந்தை நிகழ்வுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (04.03.2025) பி.ப 3.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் அவர்களால் தொழிற்சந்தை நிகழ்வுக்கான விடயங்கள் விளக்கமளிக்கப்பட்டதுடன், தொழிற்சந்தை நிறுவனங்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார். மேலும் இத் தொழிற் சந்தையில் 500 வரையான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் ஆயிரம் வரையான தொழில் தேடுனர்கள் பங்குபற்றவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், நிறுவனங்களின் அபிப்பிராயங்கள் கேட்டறிந்து சிறப்பாக தொழில் சந்தையினை நடாத்துவதற்கும் யாழ்மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு அதிகவாய்ப்பானதாக அமைய அனைவரும் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
இக்கலந்துரையாடலில் 30 வரையான நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவன பிரதிநிதிகளும் மனிதவள மாவட்ட இணைப்பாளர் மற்றும் மாவட்ட மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை