நெல்லிக்காய் ஜாம் செய்வது எப்படி!!
தேவையான பொருள்கள்:
நெல்லிக்காய் - 1/4 கிலோ
அச்சு வெல்லம் - 300 கிராம்
சுக்கு - சிறிய துண்டு
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
புட் கலர் - சிறிது
செய்முறை.
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 10 நிமிடம் கழித்து நெல்லிக்காய் நன்றாக வெந்ததும் அடுப்பை அனைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து சிறிது நேரம் ஆற விடவும்....
ஆறிய பிறகு நெல்லிக்காய்யை வெட்டி அதிலுள்ள கொட்டைகளை நீக்கி விடவும். பிறகு அதை மிக்ஸ்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். சுக்கை பொடி பண்ணி வைக்கவும்....
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் அச்சு வெல்லம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். அதோடு அரைத்து வைத்திருக்கும் நெல்லிக்காய் விழுதை சேர்த்து கெட்டிப்பதம் வரும் வரை கிளறவும்....
இறுதியில் சுக்குத்தூள், ஏலக்காய் தூள் இரண்டையும் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான நெல்லிக்காய் ஜாம் ரெடி......
கருத்துகள் இல்லை