வரலாற்றில் இன்று !


சிங்கள / வெளியக சக்திகளின் சதிக்குப் பலியாகி தமிழ்த் தேசக் கோட்பாட்டை நிர்மூலம் செய்யும் 'பிரதேசவாதம்' என்னும் கருத்தியலைக் கையிலெடுத்து வரலாற்றுத் துரோகத்தைப் புரிந்த கருணா என்னும் முரளிதரனை பிரிகேடியர் ரமேஸ் தலைமையில்  கேணல் ராம் , கேணல் ரமணன், கேணல் பிரபா, கேணல் கீர்த்தி, கேணல் ஜெகாத்தன் வழிகாட்டலில்  ஜெயந்தன் படையணிப் போராளிகள் தென் தமிழீழத்திலிருந்து விரட்டியடித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நாட்கள் இவை.


படைத்துறை ஆய்வாளர் மாமனிதர் தராகி சிவராம் இறுதி  நாளான இன்று ( 12/04/2004) நடந்த தாக்குதல் குறித்து பின்வருமாறு விபரிக்கிறார்.


"அதே வேளை இயக்கத்தைக் கைவிட்ட தளபதி வாகரையினதும், அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்களினதும் வீழ்ச்சியையிட்டு தாறுமாறாகக் குழப்பமடைந்தார். ஆனால் அவர் தொப்பிகலவில் தான் பாதுகாப்பாக இருப்பதாக இன்னமும் நம்பினார்.


கருணா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டுக்கொண்டிருந்த மேற்கு வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள இரகசிய முகாமை நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு புலிகளின் விசேட படையணிகளின் இரண்டு தாக்குதல்கள்  நடைபெற்றன. இது கட்சிமாறிய தளபதிக்கும் அவரது சகாக்களுக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்தது.  தெரிவு செய்யப்பட்டுத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட இந்த இரண்டு   தாக்குதல்களும் கருணாவை பெரும் பீதிக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்கியது. தன்னுடைய பாதுகாப்பு மையங்களுக்குப் புலிகளின் விசேட படையணிகள் ஊடுருவி வந்தமை அவரால் புரிந்துகொள்ளமுடியாத புதிராகவே அவருக்கிருந்தது. ஜெயந்தன் படையணிப் போராளிகள் துரிதமாக நகர்வுகளை மேற்கொண்டனர். இந்த புது போர்முறைகளைக் கருணா அவர்கள் அடிக்கடி செல்லாத வன்னியில் ஒரு தெளிவற்ற முறையில் கேள்விப்பட்டிருந்த போதிலும் அதுபற்றி ஆழமாகச் சிந்தித்துப் புரிந்துகொள்வதற்கான அவகாசமும் நேரமும் அக்கணத்தில் அவருக்கு இருக்கவில்லை.


தரவை- வடமுனை காடுகளில் அமைந்துள்ள பிரதான முகாம்களின் பிரிவுத் தளங்கள் மீது தொடுக்கப்பட்ட விசேட படையணியின் தாக்குதல்களும் உளவியல் செயற்பாடுகளும் கருணாவைக் கிலிகொள்ளச் செய்து, எத்தகைய சந்தர்பங்களிலும் தனக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் குலையவே, அவர் தனது படையணிகள் மீது கொண்டிருந்த பிடியை இழந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்கைமாறிய தளபதி கிட்டத்தட்ட 12 நண்பர்களுடனும் லெப்ரினன்களுடனும் மட்டக்களப்பை விட்டு தப்பி ஓடினார். கிழக்கு மாவட்டத்தின் புலிகளின் பெண்கள் படைப்பிரிவின் தளபதியாகிய நிலாவினியும் இவர்களுடன் சேர்ந்து மட்டக்களப்பைவிட்டுத் தப்பிஓடினார். இவருடைய குறுகிய கால ஆயுளைக்கொண்ட எதிர்புரட்சி உண்மையிலேயே புலிகளுக்கு உதவியது என்றே சொல்லலாம்.


ஏனெனில், அவர்கள் சிறீலங்காவின் அரசியல் இராணுவச் சமன்பாடுகளுக்கு மேலாக ஒரு பலம்வாய்ந்த தடத்துடன் தங்களை வெளிக்காட்ட இது உதவியது என்று துணிந்து கூறலாம். 'நாங்கள் கருணாவை, எங்களுடைய தலைவரின் பணிப்புரைகளுக்கு அமைவாக இரத்தம் சிந்தாமல் வெளியேற்றவே எங்களது நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறோம். எதிர்காலத்தில் அவர்கள் கனவிலும்கூட எதிர்ப்புக்கொடி தூக்குவதற்குச் சிந்திக்காத வண்ணம் நாங்கள்

எங்கள் செயற்பாட்டைச் செய்துமுடிப்போம். என்று கேணல் ரமேஸ் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்.


 கருணா தோற்கடிக்கப்பட்ட முறை புலிகளால் இரண்டு வருடங்களுக்கு முதல் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட காலந்தொட்டு அவர்கள் எவ்வளவு தூரம் துணிவும் வீரமும்கொண்டு வளர்ந்திருக்கிறார்கள் என்பதை ஒரு சிறிய அளவில் வெளிக்காட்டுகிறது.


கடந்த 2 வருடங்களின்போது பிரபாகரனால் உருவாக்கப்பட்ட விசேட படையணிகளும் உளவியல் செயற்பாடுகளுக்கான பிரிவுகளும் எத்துணை வல்லமை பொருந்தியவை என மூத்த புலிகளின் தளபதியாக இருந்த கருணாவிற்குக்கூடத் தெரிந்திருக்கவில்லை."

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.