17 பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூா்’ எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளது!
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை தொடா்ந்து, உத்தர பிரதேசத்தில் 17 பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூா்’ எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.
உத்தர பிரதேச மாநிலம் குஷிநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 10, 11-ஆம் திகதிகளில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூா் எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் தெரிவித்தாா்.
கருத்துகள் இல்லை