யுக்ரேன் தலைநகரில் ரஷ்யா கொடூரமாக தாக்கியது!📸
ஜூன் 6-ம் தேதி அதிகாலை யுக்ரேன் தலைநகர் கியிவ் ரஷ்யாவில் இருந்து தீவிரமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாக யுக்ரேன் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் மிக சக்திவாய்ந்ததாக இருந்ததாகவும் இதுவரை நடந்த தாக்குதல்களில் இது மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததாகவும் கியிவில் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவிற்குள் புகுந்து Bomber Aircraft வகை விமானங்கள் மீது யுக்ரேன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு ரஷ்யா நிச்சயமாக பழிவாங்கும் என முன்னதாக ரஷ்ய அதிபர் ஜனாதிபதி புதின் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை