முறுக்கு செய்வது எப்படி.!


தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 2 கப்

வெள்ளை உளுந்து – 1/2 கப்

பொட்டுக்கடலை – 1/4 கப்

பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி

வெள்ளை எள் – 1 தேக்கரண்டி

வெண்ணை – 2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

முறுக்கு செய்வது எப்படி தமிழில்:

ஸ்டேப்: 1 

Advertisement


முதலில் கடாயை அடுப்பில் வைத்து 1/2 கப் வெள்ளை உளுந்து சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும். பின்பு அதனை தனியாக எடுத்து வைக்கவும்.


ஸ்டேப்: 2

பின்பு உளுந்து ஆறியதும் அதனை மிக்சியில் போட்டு அரைக்கவும். அரைத்த பின் அந்த மாவை எடுத்து சலிக்கவும்.


ஸ்டேப்: 3

பின்பு கனமான பாத்திரத்தில் 2 கப் அரிசி மாவு, 1/2 கப் உளுந்து மாவு 1 தேக்கரண்டி வெள்ளை எள், 2 தேக்கரண்டி வெண்ணெய், 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்க்கவும்.


ஸ்டேப்: 4

இது அனைத்தையும் சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு கலந்துகொள்ளவும். பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். பின்பு நன்றாக பிசைந்துகொள்ளவும்.


ஸ்டேப்: 5

மாவு நன்றாக முறுக்கு பதத்திற்கு வந்தவுடன் முறுக்கு அச்சியை எடுத்து உரலில் போட்டுக்கொள்ளவும்.


ஸ்டேப்: 6

கடைசியாக ஒரு வாணலியில் முறுக்கு பொரித்து எடுக்க தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி சூடாகும் வரை காத்திருக்கவும்.


ஸ்டேப்: 7

சூடானதும் ஒரு சிறிய தட்டிலோ அல்லது இலையிலோ முறுக்கை பிளிந்துகொள்ளவும். எண்ணெய் சூடானதும் அதில் போட்டு 1 நிமிடம் வேகவிடவும் அதன் பின் திருப்பி போட்டு 1 நிமிடம் வேக வைக்கவும்.


இப்போது வெந்த பின் தனியாக பாத்திரத்தில் எடுத்து வைக்கவும், மீதமுள்ள மாவையும் பிழிந்து முறுக்கு சுட்டு எடுக்கவும் அவ்வளவு தாங்க முறுக்கு ரெடி.......

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.