தமிழ்த் தேசிய வீரர்கள் தினம் நினைவு கூரல்!🎥


ஈழ விடுதலைப் போராட்டத்தின் பிதாமகர்களை நினைவுகூரும் 42 ஆவது தமிழ் தேசிய வீரர்கள் தினம் இன்று சனிக்கிழமை தந்தை செல்வா நினைவு கேட்போர் கூடத்தில் 

மாலை-03.00 மணி இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர் சுரேன் குரு சுவாமி தெரிவித்தார்.


1983 ஆம் ஆண்டு யூலை மாதம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி மூத்த போராளிகள் ஜெகன், தேவன், நடேசுதாசன் உட்பட 53 ஈழ விடுதலைப் போராட்டத்தின் பிதாமகர்களையும் பொது மக்களையும் அஞ்சலிக்கும் 42 ஆவது ஆண்டு நினைவேந்தலாக குறித்த நிகழ்வு அமைய உள்ளது


நிகழ்வின் சிறப்பு விருந்தினர்

வீ. தனபாசிலிங்கம் மூத்த ஊடகவியலாளர் விருந்தினர்களாக

சி வி கே சிவஞானம் அவைத் தலைவர் வடமாகாண சபை | பதில் தலைவர் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 


செல்வம் அடைக்கலநாதன்.பா.உ- தலைவர் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பா.உ - தலைவர் தமிழ் தேசிய பேரவை,தர்மலிங்கம் சித்தாத்தன் தலைவர் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ,சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைவர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ,சி. நவீந்திரா (வேந்தன்] தலைவர் ஜனநாயக போராளிகள் கட்சி , முருகேசு சந்திரகுமார் தலைவர் சமத்துவக் கட்சி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். 


குறித்த நிகழ்வுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.