ஹனோவர் அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய மஹோற்சவ விழா விஞ்ஞாபனம்!

 


ஹனோவர் அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய மஹோற்சவ விழா விஞ்ஞாபனம்25.07.2025 - 06.08.2025


அம்பிகை அடியார்களே !


எல்லாம் வல்ல அன்னை ஆதிபராசக்தியாகிய ஸ்ரீ முத்துமாரி அம்பிகையின் தனிப்பெருங் கருணையினாலே பல இயற்கை வளங்களும், கல்விச்செல்வம், செல்வச்செழிப்பு. பக்திப்பெருக்கு முதலியன பூரணமாக விளங்கும் ஜேர்மன் தேசத்திலே, ஹனோவர் எனும் அழகிய நகரிலே, புலம் பெயர்ந்து வந்த நம் சைவ சமய சீலர்கள், அம்பிகை அடியார்களின் பக்தி கூடிய உந்து சக்தியினாலும், அறங்காவலர்களின் விடா முயற்ச்சியினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும், கண்ணையும் கருத்தினையும் கவரும் வண்ணம் மெருகூட்டி அமைக்கப்பட்ட ஆலயத்திலே நிகழும் மங்களகரமான வெற்றிதரும் விசுவாவசு வருடம் ஆடித் திங்கள் 9ம் நாள் (25.07.2015) வெள்ளிக்கிழமை, சுக்கில பட்ஷம்

பிரதமைத்திதியும், பூர நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் 11:15 மணி முதல் 12:45 மணி வரை, உள்ள மகர லக்ன நம முகூர்த்த வேளையில் துவஜாரோகணத்துடன் (கொடியேற்றம்) ஆரம்பமாகி தொடர்ந்து மகோற்சவம் நடைபெற நிருவருள் கைகூடியுள்ளது. இந்தினங்களில் நிகழும் தெய்வீகக்கிரிகைக் காலங்களிலே அன்பர்கள் அடியார்கள் குடும்பசமேதராக ஆலயத்திற்க்கு வருகை தந்து அம்பிகையை தரிசித்து வேண்டிய பெறுபேறுகளைப் பூரணமாக பெற்றுப்புறமாறு வேண்டிக்கொள்கின்றோம்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.