நல்லைக் கந்தன் தேர்த்திருவிழா!📸
திருவிழாக்கள் ஐந்தொழிலைக் குறிக்கின்றன
தேர்த்திருவிழா அழித்தல் தொழிலை குறிப்பிடுகின்றது
ஆமாம் பக்த கோடிகளின்
ஆணவம் கன்மம் மாயை நீக்கி
அருள்புரிய இனிதே தேர் ஏறி வருகின்றான்
மங்கள வாத்தியங்கள் முழங்க
வேதியர் வேதம் ஓத
முக்கோடி முத்தேவர்கள் பூச்சொரிய
இலட்சோப லட்சம் பக்தர்களின் அரோகராச் சத்தம்
வானைப்பிழக்க
பக்தர்களின் பஜனைகள்
காவடி கற்பூரச்சட்டி
பிரதிஷ்டை நேர்த்திகளோடு
ஈரேழு பதினான்கு உலோக அதிபதி
நாடாளும் நாயகன்
தமிழ் அரசன்
அழகன் குழகன்
ஆனந்த ஜித்தன்
வேதத்தின் நாயகன்
முத்தமிழ் வித்தகன்
கந்தன் கடம்பன்
கார்த்திகேயன்
கலியுகவரதன்
ஆறுமுகன்
அன்னை சிவகாமிபாலன்
நல்லையம்பதி காவலன்
நல்லூர் அடியார் காதலன்
அலங்காரக் கந்தன் தேர் ஏறி
வருகின்றான்
இனிதே வருகின்றான்
நல்லூரான்
நல்லையில் அவன் பெயர்
அலங்காரா
கோயிலின் அருகே கூடிய கூட்டங்கள் தலையா
கடல் அலையா
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம்
உன்பெயரை சொல்ல சொல்ல
இனிக்குதடா முருகா
முருகன் என்றால் அழகன் என்று
தமிழ்மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று
மனமொழி கூறும்
சொல்ல சொல்ல இனிக்குதடா
முருகா
நல்லூரா அலங்காரா
சித்தா மஞ்சத்தடி















































.jpeg
)





கருத்துகள் இல்லை