முஸ்லிம்களும் தமிழர்களும் என்னும் விடயத்தில்- வடக்கு கிழக்காக ஒன்றிணைய வேண்டும்!
ஒருமித்த குரலில் செயற்பட்டாலேயே எமது உரிமைகளை வென்றெடுக்க இயலும்! இஸ்லாமிய சொந்தங்கள் எமது உயிருக்கு மேலானவர்கள் என்றெல்லாம் வாய்ஜாலம் செய்யும் மனிதர்களையே இதுவரை அதிகம் கண்டிருக்கின்றேன்!
ஆனால் எம்மவர்களை விட அதிகம் நான் மதிப்பு வைக்க அவனது செயற்பாடுகளே அத்திவாரம்...!
இன்று ஈழத்தின் முன்னணி எழுத்தாளர் திரு தீபச்செல்வனின் சைனட் நாவல் யாழ்பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட, தனக்கும் ஒன்று என மிகுந்த சிரமத்தின் மத்தியிலும் பெற்றுச்சென்றிருந்தான். எழுத்தாளருடன் உரையாடும் போதும் உங்கள் புத்தகத்தில் கூறப்படும் விடயங்களை நான் ஏற்கின்றேன் என்றும் கூறினான்..
உண்மையில் ஈழதேசத்தின் வலிகளையும் வாதைகளையும் பேசும் நூல்களை இஸ்லாமிய சொந்தங்கள் ஏற்று அங்கீகரிப்பதும் யாவரும் தமிழர்களே என குரல்கொடுப்பதும் மிகுந்த நம்பிக்கையும் உற்சாகத்தையும் ஊட்டுகிறது!
மாற்றம் எம்மிலிருந்து தொடங்கட்டும்
Anas Arifeen
கருத்துகள் இல்லை