முதலிடம் பிடித்த யாழ்ப்பாண மாணவன்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு இணையத்தில் வெளியான நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டம் மாணவன் ஒருவரே 194 புள்ளிகள் பெற்று தமிழ் மொழியில் முதலிடம் பிடித்து சானை படைத்துள்ளார் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகாகுமாரி தெரிவித்துள்ளார்.
யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவனான ஆனந்தசோதி லக்ஷயன் என்பரே இந்த சாதனையைப் படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சிங்கள மொழிமூலம் முதலிடத்தைப் பிடித்த மாணவர் காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் 198 புள்ளிகள் பெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை