பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்திய கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டார்


இந்தியாவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று (18.10.2025) டில்லியில் அமைந்துள்ள சர்வோதய மாதிரி பாடசாலை மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) ஆகியவற்றை பார்வையிட்டார்.


இந்தப் பயணங்களின் போது, இந்திய கல்வி முறையில் நடைமுறைப்படுத்தப்படும் புதுமையான கற்பித்தல் முறைகள், மாணவர் பங்கேற்பு முறைமை, தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வி மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தீவிரமாக ஆராய்ந்தார்.


மேலும், கல்வித் துறையில் இரு நாடுகளுக்குமிடையேயான அனுபவப் பகிர்வை வலுப்படுத்தும் நோக்கத்துடன், கல்வி நவீனமயமாக்கல் மற்றும் புதுமை முயற்சிகள் குறித்த கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.


இவ்விழாவில் இந்திய கல்வி அமைச்சு உயர் அதிகாரிகளும், இலங்கை பிரதமரின் பிரதிநிதி குழுவினரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.