யாழ்ப்பாணத்தில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் புதிய கிளை!📸
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள லேக் ஹவுஸ் நிறுவனத்தின் யாழ்ப்பாண கிளை அலுவலகம் இன்று (18) புதுப் பொலிவுடனும் நவீன வசதிகளுடனும் சிறப்பாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்த முக்கிய நிகழ்வுடன் இணைந்து, தினகரன் மற்றும் வாரமஞ்சரி பத்திரிகைகளின் யாழ்ப்பாண ஆசிரியர் பீடப் பிரிவும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இதன் மூலம் வட மாகாணத்தில் பத்திரிகைத் துறை மேலும் வலுப்பெறுவதுடன், உள்ளூர் செய்தி வெளிப்பாடு புதிய பரிமாணத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் பீடம் வட மாகாணத்தின் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் இளம் ஊடகப் பணியாளர்களுக்கு தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், உள்ளூர் பண்பாடு, சமூகச் செயல்பாடுகள் மற்றும் மக்களின் குரலை பிரதிபலிக்கவும் ஒரு உறுதியான தளமாக அமையும்.
இந்த அருமையான வாய்ப்பை உருவாக்கிய லேக் ஹவுஸ் நிறுவனம், தினகரன் மற்றும் வாரமஞ்சரி நிர்வாகம், ஆசிரியர் குழு மற்றும் பணியாளர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பை பாராட்டத் தவறவில்லை.
இந்நிகழ்வில் கடல் தொழில், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்,
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, புதிய அலுவலகத்தின் திறப்பிலும் ஆசிரியர் பீடத்தின் தொடக்க விழாவிலும் பங்கேற்றார்.
இந்நிகழ்வு, வட மாகாணத்தின் ஊடகத் துறையின் வளர்ச்சிக்கு புதிய திசையைத் திறந்த முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை