ஈழத் தமிழர்கள் ஒரு தேசமாக ஒன்றுபடுங்கள்!

 


தமிழ்நாடு கொந்தளித்தால் ஒன்றுமே நடக்காது.. ஈழத் தமிழர்கள் ஒரு தேசமாக ஒன்றுபடுங்கள்.


*இந்தியா நினைத்தால் மட்டுமே ஈழம் கிடைக்கும்

*அண்ணன் பிரபாகரனுக்கு பின்னர் தலைவர் இல்லை

*தமிழ்நாட்டு அரசியலை நம்ப வேண்டாம்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் யாழில் தெரிவிப்பு.


தமிழ்நாடு கொந்தளித்தால் ஈழத் தமிழர்களுக்கு தமிழ் ஈழம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை கைவிட்டு ஈழத் தமிழர்கள் ஒரு தலைமையின் ஒரு தேசமாக ஒன்றுபட்டு தமிழர் பிரச்சினையை கையாள வேண்டும் என இந்தியா நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல் திருமாவளவன் யாழில் தெரிவித்தார்.


நேற்று வெள்ளிக்கிழமை யாழ் சங்கிலியன் பூங்காவில் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கார்த்திகை மலர் கண்காட்சியை ஆரம்பித்து வைக்க நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


அவர் மேலும் தெரிவிக்கையில் எனக்கும் ஈழத் தமிழருக்குமான உறவு இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல வன்னிய ஆண்ட அண்ணன் பிரபாகரன் இந்தியாவில் கைது செய்யப்பட்டபோது எமது போராட்டத்தை சட்டத்துறை மாணவனாக ஆரம்பித்தேன். 


நான் அரசியலில் இன்று இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் அண்ணன் பிரபாகரன் அவருடைய இனத்துக்கான போராட்டம் என்னை பொது வாழ்வியலுக்கு கொண்டு வந்தது. 


ஈழத் தமிழர்களுடைய அரசியல் வெறுமனே தமிழ்நாட்டு அரசியலை மட்டும் நம்பி இருக்க கூடாது என்ற கருத்தை ஆணித்தரமாக கூற விரும்புகிறேன். 


தமிழ்நாடு கொந்தளித்தால் ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைத்து விடும் என சில ஈழத் தமிழ அரசியல்வாதிகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அது நடக்காது. 


ஆனால் இலங்கையில் தமிழ் மக்களுக்கான ஈழத்தை பெற்று கொடுக்க நினைத்தால் அது இந்தியாவால் மட்டுமே சாத்தியமாகும் அதையும் கூறி வைக்க விரும்புகிறேன்.


இந்திய நாடாளுமன்றத்தை பொறுத்தவரையில் 545 பேர் அதில் தமிழ்நாடு 40 பேர். 


இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு சிறுபான்மையாக காணப்படுகிறார்களோ அவ்வாறே இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு சிறுபான்மையாக காணப்படுகிறது. 


தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு இந்திய அரசியலமைப்பை மாற்றவோ திருத்தவோ முடியாது.


இதனை ஏன் கூறுகிறேன் என்றால் அண்ணன் பிரபாகரன் எக்காலத்திலும் இந்தியாவை நேரடியாகவோ மறைமுகமாகவோ எதி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.