உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு நடைபயணம்!
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையம் ஒருங்கிணைத்த விழிப்புணர்வு நடைபயணம் இன்று (14.11.2025) அதிகாலை 6.00 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.
இந்நடைபயணம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், நீரிழிவு வைத்திய நிபுணர் டாக்டர் எஸ். அரவிந்தன், பொது வைத்திய நிபுணர்கள் டாக்டர் சிவன்சுதன், டாக்டர் கேதீஸ்வரன், வாழ்நாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் செந்தமிழ் சொல்லருவி திரு. லீ. லலீசன், உயிரியல் ஆசிரியர் திரு. குணசீலன், பௌதீகவியல் ஆசிரியர் திரு. சோதிநாதன் உள்ளிட்ட கல்வி மற்றும் வைத்தியத் துறையினரும் கலந்து கொண்டனர்.
மேலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ பீட மாணவர்கள், யாழ்ப்பாண மாவட்ட நீரிழிவு சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இதில் பங்கேற்று நீரிழிவு விழிப்புணர்வை பரப்பும் நோக்குடன் நடைபயணத்தில் இணைந்தனர்.
நீரிழிவு நோய் தடுப்பு, கட்டுப்பாடு, உடல் நல பராமரிப்பு, சீரான உணவு பழக்கங்கள் ஆகியவற்றை பொதுமக்களிடத்தில் வலியுறுத்தும் வகையில் இந்த நடைபயணம் அர்த்தமுள்ளதாக அமைந்தது.












.jpeg
)





கருத்துகள் இல்லை