யாழ் உரும்பிராயை சேர்ந்த நபர் மரணம்!
யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தற்கொலை செய்யப்போவதாக மனைவியை மிரட்டியதையடுத்து ஏற்பட்ட மூச்சுத் திணறலால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (14) அதிகாலை உயிரிழந்தார்.
குடும்பத் தகராறு
இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த அவர், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.
கயிறு சுருக்கி மிரட்டல்
அதன்பின் அவர் கதிரையில் அமர்ந்தபடி, கழுத்தில் கயிறு சுருக்கி “தற்கொலை செய்கிறேன்” என மனைவியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். மதுபோதையால் உரையாடலின்போதே தூங்கியுள்ளார்.
சகோதரன் உதவி – ஆனால்…
பின்னர் சகோதரன் வந்து கயிற்றை கழற்றி அவரை கீழே உறங்க வைத்தார். ஆனால் சில நிமிடங்களில் அவருக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
வைத்தியசாலையில் மரணம்
உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், வழங்கப்பட்ட சிகிச்சைகளுக்கும் பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை