தமிழக மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு!📸
தமிழ்த் தேசிய பேரவை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களுடன் சந்திப்பு இன்று இடம்பெற்றது. தியாகராஜநகரில் அமைந்துள்ள அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் 20-12-2025 காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 1.00 மணிநேரம் நேரம் இடம்பெற்றது.
இதன்போது
தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படவும்
ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிறைவேற்றுவதனை தடுத்து நிறுத்தவும் சமஷ்டி யாப்பு உருவாக்கப்படவும் இலங்கை அரசை வலியுறுத்துமாறும்
ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவும்
இந்திய மத்திய அரசை வலியுறுத்த பாஜாக மாநிலதலைவராகிய தாங்கள் நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் கலந்துகொண்டவர்கள்
தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் கலந்துகொண்டவர்கள்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
தலைவர் தமிழ்த் தேசிய பேரவை
பொதுச் செயலாளர்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்
செல்வராசா கஜேந்திரன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
செயலாளர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
தருமலிங்கம் சுரேஸ்
தேசிய அமைப்பாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
நடராஜர் காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) பிரசாரச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி





.jpeg
)





கருத்துகள் இல்லை