ட்ரம்புக்கு நன்றி கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!!


தேவையான நேரத்தில் இலங்கையுடன் துணைநின்றமைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.

தித்வா சூறவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு பேரனர்த்தங்களை தொடர்ந்து இலங்கையில் அவசர நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி அளிக்கும் முகமாக அமெரிக்கா 2 மில்லியன் டொலர்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

இந்நிலையில் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு அமெரிக்கா இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானங்களையும் அனுப்பி வைத்துள்ளது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.