இதுதான் தமிழர் திருநாளில் ஜனாதிபதி தமிழர்களுக்குக் கொடுத்த பரிசா?


தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாளில் தமிழர் தாயகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சிங்கள- பௌத்த ஆதிக்க இனவாத நோக்கில் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரை கட்டடத்தின் பிக்குவைத் தான் கலந்துகொண்ட கூட்டத்தின் முன் வரிசை ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்த்துள்ளார். இனவாதச் சட்டவிரோத விகாரைக் கட்டடத்துக்கு எதிராகவும், இராணுவத்தினரின் தனியார் நிலங்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராடுபவர்களை இனவாதிகள் என அடையாளப்படுத்தித் தமிழர் தாயக மக்களை அவமானப்படுத்தியுள்ளார். 


இதுதான் ஜனாதிபதி தமிழர் திருநாளில் தமிழர்களுக்குக் கொடுத்த பரிசா? எனச் சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் இன்று (18.01.2026) கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.