சிவப்பு அறிவிப்பு' குற்றவாளி இந்தியாவில் கைது!
'சிவப்பு அறிவிப்பு' குற்றவாளி இந்தியாவில் கைது: கட்டுநாயக்கவில் சிஐடியினரால் பொறுப்பேற்பு!
சர்வதேசப் பொலிஸாரால் 'சிவப்பு அறிவிப்பு' (Red Notice) பிறப்பிக்கப்பட்டு, இந்தியாவில் தலைமறைவாக இருந்த 34 வயதுடைய பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் இன்று (24.01.2026) மாலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
இலங்கை பொலிஸ் மா அதிபர், இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் மேற்கொண்ட நேரடிப் பேச்சுவார்த்தைகளின் பலனாக இந்த நாடு கடத்தல் நடவடிக்கை சாத்தியமானது.
கைது நடவடிக்கை: கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபரை, குற்றப்புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகள் பொறுப்பேற்றனர். மேலதிக விசாரணைகளுக்காக அவர் தற்போது கேசல்பத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டுகள்: கேசல்பத்தை பிரதேசத்தைச் சேர்ந்த இவருக்கு எதிராகப் பின்வரும் பாரிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றில் வழக்குகள் நிலுவையில் உள்ளன:
2015: கேசல்பத்தையில் கூர்மையான ஆயுதங்களால் ஒருவரைக் கொலை செய்தமை.
2018: கொட்டாஞ்சேனையில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவத்திற்குத் துணை நின்றமை.
2021: மட்டக்குளியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியமை மற்றும் கொட்டாஞ்சேனையில் கைக்குண்டு வைத்திருந்தமை.
ஏனையவை: கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரங்கள்.
கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையில் இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

.jpeg
)





கருத்துகள் இல்லை