முல்லைத்தீவு – கரடிப்புலவு : மீண்டும் ஒரு உயிர் பறிக்கப்பட்டது!


முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கரடிப்புலவு கிராமத்தில் 27 ஆம் திகதி இரவு இடம்பெற்ற கொடூர கொலைச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், இனந்தெரியாத நபரின் தாக்குதலால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உணவு வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய வேளையில், தலையின் பின்பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்டதே உயிரிழப்பிற்கு காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தவர்,

கரடிப்புலவு பகுதியைச் சேர்ந்த நாகையா நாகராஜா (41) என்பவராவார்.

கரடிப்புலவு கிராமங்களிலும் வீதிகளிலும் இனி யாரும் பாதுகாப்பாக இல்லை என்ற நிலை பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.