நல்லூர் கந்தசுவாமி கோவில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு!
நல்லூர் கந்தசுவாமி கோவில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு - 31.01.2026நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று (31) காலை இடம்பெற்றது.
தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் 'புதிர் தினம்' எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயலுக்குச் செல்வார்கள்
அந்த வயலில் பூஜை வழிபாட்டுடன் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து நல்லூர் கந்தசுவாமிக்கு படையல் வைத்து பூசைகள் செய்து அடியவர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படும் .
இவ்வழிபாட்டு முறை நல்லூர் கந்தசுவாமி கோயிலின் மரபாக பண்பாட்டு விழாவாக பேணப்பட்டு வருகிறது.














.jpeg
)





கருத்துகள் இல்லை