நுவரெலியா தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி!📸


"முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நுவரெலியா மாவட்டத்துக்கு பயணம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள், இன்று (11) காலை அந்த மாவட்டத்தின் தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்தார்.


இதன் போது, தொழிலாளர்களின் வாழ்வாதார நிலை, வேலை தொடர்பான சவால்கள் மற்றும் குடும்ப நலன் உள்ளிட்ட விடயங்களைப் பற்றி ஜனாதிபதி அவர்கள் அக்கறையுடன் கேட்டறிந்து, அவர்களின் சுகதுக்கங்களை விசாரித்தார். மேலும், தோட்ட சமூகத்தின் எதிர்கால முன்னேற்றம், சமூக பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக சிநேகபூர்வமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.


தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி விளக்கமளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.


நிகழ்வில் உள்ளூர் அரச அதிகாரிகள் மற்றும் தோட்ட நிர்வாக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.