இதுவும் அழிந்துபோகும் அமெரிக்க ஏவுகணை தாக்குதல்களில்!
கோமூஸ் தீவை கைப்பற்ற பிறிதொரு பகுதியில் அமெரிக்க கொமாண்டோக்கள் நிச்சயம் தரையிறங்கும்!
ஈழப்போர் அனுபவமற்ற தற்கால இளையோர்களுக்கு ஏ ஐ காட்சிகள்கூட நிஜமானதாகவே தெரியும்.
உண்மையை கூறவேண்டுமானால் ஈரான் தரைப்படைகள் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு இராணுவ,ஆயுதப்பேரழிவை அமெரிக்காவால் வரும் நாட்களில் நடத்தப்போகும் பாரிய அதிரடி தாக்குதல்களில் நிச்சயம் எதிர்பார்க்கமுடியும்.
போரியல் நிலவரப்படி ஈரானின் எரிபொருள் தீவான கோமூஸ் தீவினை அமெரிக்கா கைப்பற்றுவதற்கு முன்னர்,பிறிதொரு பகுதியில் அமெரிக்க கொமாண்டோ படைகள் தரையிறங்கி,அதாவது ஈரானின் பிறிதொரு பகுதிக்குள் திசைதிருப்பல் தாக்குதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்து, அந்த களமுனைக்குள் எதிரிகளை இழுத்து தமது பிரதான களமுனையை இலகுவாக கைப்பற்றுவதற்காக திட்டத்தையே நிச்சயம் போடுவார்கள்.
போர்கள அனுபவமற்ற இலங்கை,இந்திய தமிழ் ஈரானிய ஆதரவாளர்களுக்கு ஏ ஐ காட்சிகளே 💥👈போதும், அவர்களை இலகுவாக ஏமாற்றி ஈரானுக்கு ஆதரவாக விசிலடிக்கவைப்பதற்கு.💥🤣👈
உண்மையை கூறவேண்டுமானால்,தமிழக மற்றும் தாயக புலம்பெயர் தமிழ் மீடியாக்கள் பல தமக்கான பார்வையாளர்களை அதிகமாக கவர்வதற்காக இப்போது ஈரானுக்கு ஆதரவான பொய் செய்திகளையே 💥👈உண்மை நிலவரங்களை தாம் தெரிந்துகொண்டும் பரப்பிவருகிறார்கள்.
இந்த செயலானது ஊடக தர்மத்தை குழிதோண்டி புதைக்கும் ஒருவகையான படுகொலை எனலறே கூறமுடியும்.
ஈரானை நாம் ஆதரிக்காவிட்டாலும், அல்லது எதிர்க்காவிட்டாலும் இந்த ஊடகங்களை நம்பி தமது எதிர்காலத்தை பொய்யாலும்,புரளியாலும் வளர்த்துக்கொண்டிருக்கும் தற்கால இளைய தலைமுறையை💥👈நினைக்கும்போது, இந்த தலைமுறைக்கு இனி உண்மை எது பொய் எது என்று தெரிவதென்பது மிகவும் கடினமாகவே இருக்கப்போகிறது.
சரி இனி ஈரான் போர்கள விடையத்துக்குவருகிறேன்……..
அதாவது ஈரானின் கோமூஸ் கடற்பாதையை கைப்பற்றுவதற்கான அமெரிக்க படைகளின் நிறைவாகிக்கொண்டிருக்கும் போர்த் திட்டத்தில், அந்த பகுதிதான் அமெரிக்க இராணுவத்தின் பிரதான இலக்காக இருந்தாலும்💥👈 ஈரானின் பிறிதொரு பகுதியில்தான் முதற்கட்டமான தரைவழி தாக்குதலை அமெரிக்கப்படைகள் நடத்தும்💥👈என்பதே எனது இராணுவ ரீதியான அனுபவமான கருத்தாகும்.
குறைந்தபட்சம் கோமூஸ்தீவை அண்மித்த,அல்லது கோமூஸ்தீவை பாதுகாக்க பிறிதொரு பகுதியில் ஏற்கனவே பாரிய முன்னேற்பாடுகளோடு நிலையெடுத்திருக்கும் ஈரானிய தரைப்படைகளை 💥👈இலக்குவைத்தே முதற்கட்டமான வான்வழி மற்றும் சாதகமான தரைவழி தாக்குதல்களை அமெரிக்க படைகள் நடத்தும் என்றே எதிர்பார்க்கமுடியும்.
காரணம் கோமூஸ் பகுதியை தாம் ஒருபோதும் இழக்கக்கூடாது என்பதற்காக ஈரான் படைகள் அந்த பகுதியை குறிவைத்து பிறிதொரு பகுதியிலிருந்து நிச்சயம் தமது அதிகூடிய இராணுவ பலத்தை திரட்டி நிலையெடுத்திருப்பார்கள் என்பதை போரியல் அவதானிப்பாளர்கள் புரிந்துவைத்திருப்பார்கள்.
இதற்கு உதாரணமாக ஈழத்து களத்தில் நடந்த ஒரு சிறிய உதாரணத்தை இங்கே இளைய தலைமுறையின் அறிவுத்தெளிவிற்காக பதிவிடுகின்றேன்.
அதாவது 1996ம் ஆண்டு புலிகள் அமைப்பால் நடத்தப்பட்ட “ஓயாத அலைகள்”💥👈💪🏻என்று பெயரிட்டு நடத்தப்பட்ட ஒரு மிகப்பெரும் இராணுவ முகாம்மீதான முற்றுகை தாக்குதலை முறியடிப்பதற்காக இலங்கை படைகள் ஒரு திசைமிருப்பு தாக்குதலை அந்த முல்லைத்தீவு களத்திற்கு வெளியால் உள்ள, அந்த முகாமை அண்டிய சில கிலோமீட்டர்கள் தள்ளி,அதாவது அளம்பில் என்ற கரையோர கிராமப்பகுதியில்,💥👈கடல் மற்றும் வான்வழி தாக்குதல்களை சரமாரியாக நடத்திக்கொண்டு சமநேரத்தில் கடற்படை லான்டிங் கிறாப்ட் என்ற தரையிறக்க கலம் ஊடாக சூமார் 500💥👈வரையான கொமாண்டோ துருப்புக்களை முதற்கட்டமாக தரையிறக்கியிருந்தார்கள்.
ஆனாலும் அப்படி தரையிறங்கியவர்களை புலிகளின் கொமாண்டு படைப்பிரிவுகள் உடனடியாக அந்த களத்துக்குள் சென்று மிக கடுமையாக சண்டையிட்டு மேலதிக தரையிறக்கங்களை தடுத்ததுடன்,ஏற்கனவே இறங்கியவர்களை தமது பதில்தாக்குதல் வலிமையால் சிதறடித்து ஒருசில தினங்களிலேயே அவர்களில் நாணூறுபேர்வரையில் கொன்று ஏற்கனவே அவர்கள் வந்த வழியால் செல்லமுடியாத அளவுக்கு நிலமையை தமதாக்கி களத்தில் காயப்பட்ட படைவீரர்களைக்கூட தூக்கிச்செல்லமுடியாமல் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என கதறிக்கொண்டு கடல்வழியாகவே தப்பியோடிவிட்டார்கள்.
அப்படி அவர்கள் தப்பியோடிய காட்சிகளை முல்லைத்தீவின் பிரதான தளத்தின் கரையோரத்தில் நின்று எனது கண்களால் இந்த காட்சிகளை நான் பார்த்தவன் என்பதில் மிகவும் பெருமைகொள்கிறேன்.
இங்கே மேற்கூறிய விடையங்கள் நடப்பதற்கு எமது போராளிகளின் தாக்குதல் வலிமையும், தலைவர் அவர்களின் சிறப்பான வழிநடத்துதலும்,அபாரமான உயிர்கொடைகளும்தான் பிரதான காரணமாகும்.💥👈💪🏻
ஆனால் ஈரான் படைகளிடம் அது உள்ளதா?💥👈
என்னைப்பொறுத்தவரை இல்லை என்பதே எனது சுருக்கமான பதிலாகும்!💥👈
ஈரான் படைகளை எப்படி தாக்கி அழிக்கவேண்டும் என்பதில் சிறப்பான திட்டமிடலாளர்களாக அமெரிக்காவும்,இஸ்றேலும் கைதேர்ந்த வல்லுனர்களாக இருப்பதனால் அவர்களுக்கே இந்த களம் சாதகமாக அமையும்.
களம் கடினமாகவே இருக்கும்,💥ஆனாலும் வெற்றியென்பது அமெரிக்க,இஸ்றேல் பக்கமே சாதகமாக உள்ளதென்பதை தெளிவாக என்னால் கூறமுடியும்.
காரணம் அமெரிக்க,இஸ்றேலிய நவீன ஆயுத தொழில்நுட்பங்கள் மிகவும் அதிகமாக இந்த களமுனையில் பயன்படப்போகிறது.💥👈
இதனால் ஏற்கனவே நிலையெடுத்திருக்கும் ஈரானிய படைகளை அவர்கள் எங்கெங்கு நிலைகொண்டிருக்கிறார்கள்,என்னென்ன ஆயுதங்களை பிரதானமாக நகர்த்தியுள்ளார்கள், படைகள் எவ்வளவு,படைகளுக்கான கவசவாகனங்கள் எவ்வளவு, தாக்குதல் ஆரம்பித்தால் அவர்களால் வரப்போகும் எதிர்பலபுகளை எப்படி எதிர்கொள்வது?💥👈
என்றெல்லாம் இப்பவே அமெரிக்க கொமாண்டோக்கள்,அவர்களுக்கு ஆதரவாக செல்லப்போகும் அமெரிக்க கடற்படை,வான்படை தளபதிகள் முடிவுசெய்திருப்பார்கள் என்பதை இங்கே உறுதியாக கூறமுடியும்.
வானில் இருந்து தரையில் உள்ள ஈரானிய படைகளையும்,அதன் படைக்கலன்களையும் நிச்சயம் இந்த போரில் அமெரிக்க மற்றும் இஸ்றேலிய விமானப்படைகள் இலக்குவைத்து கவசங்களை தேடிச்சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி அழிப்பார்கள் என்பதை பெரும்பாலும் பிரதானமாக எதிர்பார்க்கமுடியும்.
நன்றி

.jpeg
)





கருத்துகள் இல்லை