திருகோணமலைக்கு நகர்த்தப்படும் ஈரானின் கடற்படைக் கப்பல்!
கொழும்பின் பாதுகாப்புசார் நலன் கருதி திருகோணமலைக்கு நகர்த்தப்படும் ஈரானின் கடற்படைக் கப்பல் -
கப்பலில் மீட்கப்பட்ட 208 ஈரானிய கடற்படையினரை வெலிசற கடற்படை முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்க நடவடிக்கை - ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க .
இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படை கப்பல் தொடர்பாக ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் முக்கிய பகுதி
*கப்பல் திருகோணமலைக்கும், ஊழியர்கள் கொழும்பிற்கும் அழைத்து வர நடவடிக்கை*
கொழும்பு துறைமுகம் எமது பிரதான வர்த்தக மையமாக விளங்குவதால், சர்ச்சைக்குரிய இந்த கப்பலை அங்கு நிறுத்தி வைப்பது கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், சில கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணங்களை (Insurance rates) அதிகரிக்கவும் இது காரணமாகலாம்.
எனவே, குறித்த கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கப்பலில் உள்ள 208 ஊழியர்களை பாதுகாப்பாக மீட்டு, எமது கடற்படையினரின் படகுகள் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் விபரங்கள்:
மீட்கப்படவுள்ள 208 பேரில் பின்வருவோர் உள்ளடங்குகின்றனர்:
* 53 அதிகாரிகள்
* 84 கெடட் (Cadet) அதிகாரிகள்
* 48 சிரேஷ்ட கடற்படையினர்
* 23 கடற்படையினர்
கப்பலில் 300 குழந்தைகள் உள்ளார்கள் என்ற தகவல் பொய்யானதாகும்
இந்த மீட்புப் பணிகளைத் தொடர்ந்து, ஈரான் கடற்படையினரும் எமது கடற்படையினரும் இணைந்து கப்பலை திருகோணமலைக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
மீட்கப்பட்ட ஈரானிய கடற்படையினர் வெலிசற கடற்படை முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்கப்படுவார்கள்.





.jpeg
)





கருத்துகள் இல்லை