Irish Bushehr இல் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது!
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் உள்ள ஈரானிய கடற்படைக் கப்பலான Irish Bushehr இல் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
# கப்பலில் உள்ள 208 பணியாளர்களும் கொழும்புத் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு, மேற்படி கப்பல் திருகோணமலைத் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும்.
# தற்போதைய போர் சூழ்நிலையில் நமது நாடு 'நடுநிலைக் கொள்கையை' பின்பற்றும்.
# ஈரானிய கப்பலான Bushehr இல் 300 குழந்தைகள் இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது.
# இலங்கையின் நிலம், கடல் மற்றும் வான்வெளியை எந்தவொரு நாட்டிற்கும் சாதகமாகவோ அல்லது எந்தவொரு நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் வகையிலோ பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது.
# உலக அமைதியை அடைய அனைத்து தரப்பினரின் அர்ப்பணிப்பும் அவசியம்.
-நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட ஊடக அறிவிப்பு-

.jpeg
)





கருத்துகள் இல்லை