அன்னை பூபதி அம்மாவின் நினைவூர்தி பயணத்தின் போது, வெற்றிலைக்கேணி மக்கள் அஞ்சலி!📸
அடக்குமுறை, மிரட்டல், ஒடுக்குமுறைகளின் நடுவிலும்…
தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் நினைவூர்தி பயணத்தின் போது, வெற்றிலைக்கேணி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அன்னை பூபதி தாயின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்று 38ஆம் ஆண்டின் 24ஆம் நாள் நினைவு நாள்.
இன்றைய தினம், அன்னையின் திருவுருவம் தாங்கிய நினைவூர்தி பொதுமக்கள் வணக்கத்திற்காக பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த ஊர்தி தாயகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் வணக்க நிகழ்வுகளுக்காகச் சென்று, இறுதியில் அன்னை தனது உயிரைத் தியாகம் செய்து உறங்கிக் கொண்டிருக்கும் #மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நினைவுச் சதுக்கத்தை சென்றடையும்.
#அன்னைபூபதி #அஞ்சலி #மக்களின்உணர்வு




























.jpeg
)





கருத்துகள் இல்லை