தாயகத்தாய்!
அடங்கா மண்ணின் தாகமாய் அறத்தில் நின்ற தாயே!
விடம் தின்றவரின் தாயாய்
திடம் கொண்ட தீயே!
அடம் கொண்ட அரக்கரின் சுயம் காட்டிய தாயே!
முடம் இல்லா அறத்தினை
முகவரி ஆக்கிச் சென்றாயே!
அமைதிப் போர்வை அணிந்த அரக்கனை
அவனியில் அம்பலப்படுத்தினாயே!
உயிரை தின்ற ஊழியை உலகிற்கு எடுத்துரைத்தாயே!
அறத்தின் அழகினை அகத்தினில் நுழைத்தாயே!
இனத்தின் விடியலுக்காய் பெரும் தவத்தினை புரிந்தாயே!
ஒற்றைத் திங்கள் ஓர்மமாய் நின்று உரிமைக்காய் உயிர் விளக்கு ஏற்றினாயே!
எத்தனை இடர்கள் முன் நின்றாலும் உன் சுடர் அணையாது தாயே!
எத்தனை யுகங்கள் கடந்தாலும் உன் தவம் கலையாது தாயே!
உன் தவம் கலையாது தாயே

.jpeg
)





கருத்துகள் இல்லை