டித்வா புயலினால் உயிரிழந்த மாணவியின் உயர்தரப் பெறுபேறு! அவள் இல்லை!


 டித்வா புயலினால் உயிரிழந்த மாணவியின் உயர்தரப் பெறுபேறு! அவள் இல்லை : சாதனை பேசுகிறது


 கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையில் ஏற்பட்ட 'டித்வா' புயலில் சிக்கி உயிரிழந்த மாணவியொருவர் உயிரியல் பிரிவில் மூன்று 'பி' சித்திகளை பெற்று பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளார்.


கேகாலை புனித ஜோசப் பெண்கள் கல்லூரியின் மாணவியான அயோத்யா சத்மினி உயிரியல் பிரிவில் மூன்று 'பி' தரங்களைப் பெற்று பல்கலைக்கழகத் தகுதி பெற்றுள்ளார்.


குறித்த மாணவி கேகாலை மாவட்டத்தில் 118 ஆவது இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் கங்கானி திலகரத்ன தெரிவித்துள்ளார்.குறித்த மாணவி தனது பதின்மூன்று ஆண்டு பாடசாலை வாழ்க்கையில் அவர் செய்த தியாகங்களின் பலன்களைக்காண அவர் இன்று இல்லை என்றும் சோகத்தை பகிர்ந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.